சின்னத்திரை தொகுப்பாளர்களில் முக்கிய ஒருவர் மாகாபா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சில ஹிட்ஸ் நிகழ்ச்சிகளான ராமர் வீடு, முரட்டு சிங்கிள் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தவர்.
இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் பின்பு வெள்ளித்திரையில் வானவராயன் வல்லவராயன், கடலை, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பஞ்சு மிட்டாய் போன்ற ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் இவரால் வெள்ளித்திரையில் பெரிதும் பிரபலமடைய முடியவில்லை.
அதனால் பின்பும் விஜய் டிவிக்கு வந்து ஆங்கரிங் துறையை சிறப்பாக செய்து வந்தார். மேலும் இவர் தற்போது தொகுப்பாளி பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருப்பதை அடுத்து அவர் நடத்தி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை சீசன் சீசனாக நடத்தினார். தற்போது மூன்றாவது சீசனை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது மற்றும் இந்த நிகழ்ச்சியும் தற்பொழுது பைனல்ஸ் வரை சென்று முடிவடைய உள்ள நிலையில் உள்ளது.
மா கா பா ஆனந்த் இன் அழகிய வீட்டின் புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகியது. அதனையடுத்து தற்போது இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.