தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மகத்.இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
ஆனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவரை மிகவும் தப்பாக கூறி வந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சிக்கு பிறகு போகுமிடமெல்லாம் இவரை பற்றி தப்பான செய்திகளாகவே வந்து கொண்டிருந்தது.
சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது கூட இவர் என்னை அனைவரும் பொம்பள பொறுக்கி என்று திட்டினார்கள். ஆனால் அப்பொழுது எனக்கு உறுதுணையாக இருந்தவர் என் நண்பன் சிம்பு தான் என்று கூறியிருந்தார்.
சிம்புவின் நண்பர் மகத் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதோடு மட்டுமல்லாமல் சிம்புவின் மூலம் தான் மஹகத்திற்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் துணை நடிகராக மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற இன்னும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் தற்போது ஹீரோவாக தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, இவன் உத்தமன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியில் ஒன்றிலும் நடுவராக பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் மகத் கடந்த வருடம் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்பொழுது இவர் கர்ப்பமாக உள்ளார் இந்நிலையில் தனது மனைவியுடன் கர்ப்பமான நேரத்தில் டைட்டான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளார் மகத். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மஹத்க்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.