2000 ஆண்டில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இவர் முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.
இதனைத்தொடர்ந்து என்னவளே,மின்னலே,பார்த்தாலே பரவசம் போன்ற இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் இன்றுவரையிலும் கலக்கி வருகிறார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் கூட்டமே அதிகம் மில்கி பாய் என்ற பெயருடன் பெண் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவர் ஹிந்தியில் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.சொல்லப்போனால் இவர் சீரியல் நடிகராக தான் தனது கெரியரை தொடங்கியுள்ளார்.பிறகு தனது நடிப்பு திறமையையினாலும்,விடாமுயற்சியின்லும் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து நடித்து வந்த இவர் சிறிது காலம் திரையுலகில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.பிறகு சில வருடங்கள் கழித்து இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். தற்போது இவர் சில படங்களை இயக்கி வருகிறார்.
நடிகர் மாதவன் sarita birje என்பவரை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.