ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக சீன் போட்ட நடிகர் மாதவன் – சரியான நேரம் பார்த்து வாயை உடைத்து அனுப்பிய பிரபல நடிகை.!

madhavan

90 கால கட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வெற்றியை கண்டவர் மாதவன் குறிப்பாக தமிழில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக இருந்தன. அந்த வகையில் மின்னலே, அலைபாயுதே, ஜேஜே,  ரன், அன்பே சிவம் என சொல்லிக் கொண்டே போகலாம்..

இருப்பினும் ஒரு கட்டத்தில் மாதவன் தமிழை தாண்டி ஹிந்தி பக்கமும் நடித்தார் இதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் போனது. ஒரு கட்டத்தில் சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் இறுதிச்சுற்று திரைப்படம் உருவானது. இந்த படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் ஹீரோயின்னாக ரித்திகா சிங், காளி வெங்கட், நாசர், ராதாரவி மற்றும் பல பிரபலங்கள் நடித்தனர். இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது மேலும் வசூலிலும் அடித்து நொறுகியது இறுதி சுற்று திரைப்படம். இந்த படம் மாதவனுக்கு மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக தமிழ் சினிமாவில் அமைந்தது.

இதன் பிறகு மாதவனுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவித்தன அதேபோல நடிகை ரித்திகா சிங்கும் பல பட வாய்ப்புகளை கைப்பற்றினார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் இறுதிச்சுற்று படத்தில் நடந்த சில சுவாரஸ்ய தகவல்களை வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

iruthi suttru
iruthi suttru

அதில் அவர் சொன்னது இறுதிச்சுற்று படத்தின் சண்டைக் காட்சிகள் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மாதவன் ரித்திகா சங் அவர்களிடம் சண்டைக் காட்சிகளில் குத்துவிடுவது ஒரிஜினலாக இருக்க வேண்டும் என சொல்லியுள்ளார். அவரும் முகத்திலேயே குத்துனார் அதில் மாதவனுக்கு ஒரு பல் உடைந்து கீழே விழுந்து விட்டது. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தார்.