actor Madhavan talks about Vivek and Vadivelu to cricketer ashwin: அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, மின்னலே, ரன், டும் டும் டும், பிரியமான தோழி, ஜேஜே, ரெண்டு, யாவரும் நலம், இறுதிசுற்று போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் மாதவன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இருவரும் நேரலை கலந்துரையாடலில் பேசும்போது நடிகர் மாதவன் வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து நடித்தது தொடர்பாக அவரது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
“விவேக் – வடிவேலு இருவருடனும் நடித்துள்ளேன். வடிவேலு சாருடன் நடிக்கும் போது எனக்கு அவ்வளவாக தமிழ் வராது. நல்ல நடிக்குறப்பா என்று பாராட்டிவிட்டு, அவருடைய ஜோக்குகள் பற்றியெல்லாம் பேசிட்டு இருப்பார். நான் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ‘தேவர் மகன்’ காலத்திலிருந்து அவரைப் பார்க்கிறேன். வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகன் நான்.
விவேக் சார் வந்து கொஞ்சம் ஆங்கிலம் கலந்து பேசுவார். ஆகையால் நான் பேசுவது எல்லாம் அவருக்குப் புரியும். கே.பாலசந்தர் சார் பட்டறையிலிருந்து வந்தவர். ரொம்ப அற்புதமான மனிதர். நான் திரைத்துறைக்கு வந்தவுடன் நாகேஷ் சார், கமல் சார் ஆகியோருடன் எல்லாம் நடித்துவிட்டேன். அதற்கு நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இப்போது கூட கமல் சாரை சந்திக்கும் போது கிள்ளிப் பார்த்துக் கொள்வேன். அனைவருமே ரொம்ப அற்புதமானவர்கள். நாகேஷ் சார் எல்லாம் உட்கார வைத்து அவர்களுடைய அனுபவங்களை எல்லாம் ஷேர் பண்ணிக் கொள்வார். நிறைய அட்வைஸ் கொடுப்பார். விவேக் – வடிவேலு ஆகியோருடன் நடித்தது எல்லாம் மறக்கவே முடியாது. விவேக் சாருடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தேன். மணி சாரும் நானும் பண்ணிய படத்தில் ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மட்டும் விவேக் சார் இருக்க மாட்டார்” என அவர் கூறியுள்ளார்.