நடிகர் மாதவனை வில்லனாக்கி பார்க்க நினைக்கும் பிரபல இயக்குனர்..! அப்போ படம் செம்ம மாஸ் தான்..!

madhavan

actor madhavan latest movie update: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் லிங்குசாமி இவர் தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி பையா போன்ற பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர்.

ஆனால் அதன்பிறகு இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே சரியான கதையம்சம் இல்லாததன் காரணமாக படுதோல்வியை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் அந்த வகையில் அஞ்சான், சண்டக்கோழி இரண்டாம் பாகம் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் தமிழில் தொடர் தோல்வியால் தெலுங்கு பக்கம் சென்ற நமது இயக்குனர் அங்கு ராம், போத்திநேனி என்ற நடிகரை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது நல்ல ஆக்சன் திரைப்படம் என்று கூறப்படுகிறது.

பொதுவாக ஆக்சன் திரைப்படம் என்றாலே வில்லன் சரியான நடிகராக இருக்க வேண்டும் அந்த வகையில் தற்போது இயக்குனர் லிங்குசாமி மாதவனை தேர்வு செய்துள்ளாராம். லிங்குசாமி மாதவன் வைத்து ஏற்கனவே பல திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.

வகையில் மாதவனின் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் தான் ரன் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேட்டை எனும் திரைப்படத்தில் கூட மாதவனுக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் இயக்குனர் லிங்குசாமி.

இவ்வாறு தொடர்ந்து லிங்குசாமியின்  பல திரைப்படங்களில்  நடித்து வந்த மாதவன் அவருடைய நட்புக்காகவாது இவர் இயக்க இருக்கும் திரைப்படத்தில் நடிப்பாரா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

madhavan
madhavan