விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் குமரன்.
இவர் தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தன் மனைவியையும் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் இவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
குமரன் பல வருடங்களாக டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார். ஆனால் சொல்லும் அளவிற்கு ஃபேமஸ் ஆகவில்லை. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் நடிகராகவும், டான்ஸ் மாஸ்டராகவும் பிரபலமடைந்துள்ளார்.
இந்நிலையில் குமரன் விஜய் பாடலுக்கு நடிகர் விஜய் போல மாரி நடனமாடி உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.