சினிமா என்றாலே எந்த நடிகர் நடிகைகளாக இருந்தாலும் யார் யாரை வேணாலும் எத்தனை முறை வேணாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அதோடு திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை என்றால் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வரலாம் திருமணம் என்ற ஒன்று சினிமாவை பொருத்தவரை சாதாரண ஒரு விஷயமாக திகழ்கிறது.
அந்த வகையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலர் மீதும் சர்ச்சைகள் எழுவது வழக்கம்.அந்த வகையில் ஒரு காலத்தில் காமெடியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வந்தவர்தான் நடிகர் கவுண்டமணி.
இவரின் சிறந்த நடிப்பினால் இவரை பல மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த மொழிகள் தெரியாது என்பதால் தமிழ் திரைப்படங்களை தவிர மற்ற மொழித் திரைப்படங்களில் நடிக்க முடியாது என்று கூறினாராம். இவ்வாறு தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவர் ஹீரோவாக நடித்து அசத்தி உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இவர் காமெடி நடிகர் செந்திலுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் இவர்களின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது இதன் காரணமாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகரும், பிரபல பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவரும் ரகசிய உறவு கொண்டதாக யூடியூப் சேனல் பேட்டியில் கூறி உள்ளார். கவுண்டமணிக்கு அந்த நடிகையின் மீது அதிக ஆசை இருந்ததாம் எனவே சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி கொடுத்து அடிக்கடி வந்து போக்குவதை கவுண்டமணி வழக்கமாக வைத்திருந்தாராம்.
பயில்வான் ரங்கநாதன் அந்த நடிகையின் பெயரை கூறினால் சங்கடமாக இருக்குமென பெயரை கூற மறுத்து விட்டாராம். அதோடு கவுண்டமணிக்கு வெள்ளை அப்பம் என்றால் மிகவும் பிடிக்கும் அதே போல் வெள்ளை தோலும் பிடிக்கும் என கொஞ்சம் கிண்டலாக கூறியுள்ளார்.