தமிழ் சினிமா உலகில் இளம் நடிகர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகர்கள் பலரும் வெள்ளி திரையில் கால் தடம் பதித்து வெற்றிகண்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல் மூலம் பிரபலம் அடைய பின் கவின்..
தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆரம்பத்தில் குணசித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் அதை தொடர்ந்து ஹீரோவாக நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெற்று தராததால் மீண்டும் சின்னத்திரை பக்கமே சென்றார். அப்படி பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துகொண்டு இறுதிச்சுற்று வரை விளையாடி வெளியேறினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கவினுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளமும் உருவாகின. பின்பு மீண்டும் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் அவருக்கு ஓரளவு நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்தது இதை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான “டாடா” திரைப்படம் திரையரங்கில் வெற்றிக்கர்மாக ஓடிக்கொண்டு வருகிறது.
இந்த படத்தை பார்த்து விட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்தனர் அதனால் டாடா படம் நல்ல வசூலை அள்ளியது. இந்தப் படத்தில் கவின் உடன் இணைந்து அபர்ணாதாஸ், பாக்கியராஜ், விடிவி கணேஷ் போன்ற பலரும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு கவினின் மார்க்கெட் அதிகரித்துள்ளது.
மேலும் பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கவினை வைத்து படம் பண்ண போட்டி போட்டு வருகின்றனர். இதனால் கவினும் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியும் உள்ளார். இந்த நிலையில் டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளமாக 1.50 கோடி வாங்க திட்டமிட்டு உள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.