பிக் பாஸ் சீசன் 3 மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சில சீரியல்கள் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றிய பிரபலமடைந்தார்.
இருந்தாலும் வெள்ளித்திரையில் சில படங்களில் சிறிய வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார். சொல்லும் அளவிற்கு எந்த படமும் வரவில்லை.
பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்த இவருக்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இவர் சோசியல் மீடியாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவதுபோல் மலர்வது காதல் என்ற வரிகளை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
அதோடு விக்னேஷ் சிவனை டேக் செய்து ஜீனியஸ் சார் என்றும் அனிருத்தை டேக் செய்து இதற்கு என்றும் ரொம்ப நன்றி தல என்றும் பதிவிட்டிருந்தார்.இதனை பார்த்த விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் அவர்களும் லைக் போட்டு இருந்தார்கள்.
ஒருபுறம் கவினின் ரசிகர்கள் எங்களுக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் நீங்கள் லாஸ்லியாவை நினைத்து இந்தப் பாடலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.