சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் திரைப்பட நடிகராக தமிழ் சினிமாவில் வளர்ந்துள்ளவர் தான் நடிகர் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் பிறகு ஏராளமான சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களில் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.இந்நிகழ்ச்சிக்கு முன்பு இவர் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.
என்னதான் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயரை எடுத்துக் கொடுத்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் லிஸ்ட் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது கவின் நடிக்கயிருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தாத்தா என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இத்திரைப்படத்தினை கணேஷ் பாபு என்பவர் இயக்கவுள்ளார்.
பிறகு திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார். இவரை தொடர்ந்து மேலும் இத்திரைப்படத்தில் கே பாக்கியராஜ், மோனிகா, ஹரிஷ் குமார் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஜென் மார்ட்டின் இசையமைக்கவுள்ளார்.
Thandhai solmikka mandhiram illai! #Dada #DadaFirstLook pic.twitter.com/gihCDolP3l
— Kavin (@Kavin_m_0431) April 21, 2022