actor kavin in mastar look photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ஒரு சீரியல்தான் சரவணன் மீனாட்சி சீரியலை இல்லதரசிகள் மட்டுமல்லாமல் இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.
இதற்கு முக்கிய காரணமே கவின் மற்றும் ரட்ச்சிதாவின் மிக சிறந்த நடிப்பு தான் காரணம் அது மட்டுமில்லாமல் சீரியல் என்றாலே பொதுவாக குடும்ப சிக்கல்களை அம்பலப்படுத்தி காட்டுவார்கள் ஆனால் இந்த சீரியலில் அப்படி இல்லை காதல் சண்டை காட்சி என அசத்தி இருப்பார்கள்.
இதை தொடர்ந்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டார் இதில் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவானது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் கிசுகிசுக்கும் வகையில் லாஸ்லியா உடன் பழக்கம் ஏற்பட்டது.
இது தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் லிப்ட் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் இதை தொடர்ந்து சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் காரணமாக தற்போது கல்லூரி நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
பொதுவாக கவின் அவ்வபோது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் இந்நிலையில் தற்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் ரெட் ஷேர்ட் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் அதே போஸில் கவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் பலர் அவரை கலாய்ப்பது மட்டுமல்லாமல் லாஸ்லியாவை ஒழுங்காக பார்த்துக் கொள்ளுங்கள் என என்று அறிவித்து வருகிறார்கள்.