வயசான காலத்துல இளங்குட்டியா கேக்குதா..? எதிர்பார்ப்பை எகிற விடும் அளவிற்கு கருணாஸின் புதிய பட ஹீரோயின்..!

karunas

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்கள் பலரும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அது மட்டுமில்லாமல் இவர்கள் நடிக்கும் திரைப்படங்களும் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணமாக இருப்பதன் காரணமாக இவர்கள் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கருணாஸ் இவர் கவுண்டமணி செந்தில் வடிவேலு போன்றவர்கள் அளவிற்கு காமெடி செய்யாவிட்டாலும் ஓரளவிற்கு ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

அந்தவகையில் ஆரம்பத்தில் இவர் நடித்த அனைத்து காமெடிகளுமே மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது இதனை தொடர்ந்து திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படத்தின் மூலம் நமது நடிகர் கருணாஸ் ஹீரோவாக அறிமுகமானார்.

இவ்வாறு நடித்த முதல் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது இதனைத் தொடர்ந்து தானே தயாரித்து சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் அந்த திரைப்படங்கள் இவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை.

இந்நிலையில் துணைக் கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரம் போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து வரும் கருணாஸ் தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக அவதாரம் எடுக்கவுள்ளார் இவ்வாறு இவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பிக்பாஸ் பிரபலம் ரித்விகா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் பூஜைகள் கூட சமீபத்தில் மிக சிறப்பாக முடிவடைந்த நிலையில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடப்பதாக தெரியவந்துள்ளது. நடிகர் கருணாசுக்கு 51 வயது ஆகிவிட்டது இந்நிலையில் 28 வயது நடிகை அவருக்கு ஜோடி என்றதன் காரணமாக படத்தின் எதிர்பார்ப்பு  எகிரி கிடைக்கிறது.

rithvika
rithvika