நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சூர்யா நடிப்பில் வெளியாகிய நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு பல திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
பல காமெடி நடிகர்கள் காமெடியனாக நடித்து விட்டு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலம் அடைந்துள்ளார்கள் அதனால் கருணாஸ் அவர்களும் எப்படியாவது நம்மளும் ஒரு திரைப்படத்தில்ஹீரோவாக நடிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்டு உள்ளது அதனால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவ சண்முகநாதன் இயக்கத்தில் வெளியாகிய திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த வடக்குநோக்கியரம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும் இந்த திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகியது. அதாவது தான் அழகாக இல்லை என நினைத்துக்கொண்டு அழகான மனைவி கல்யாணம் செய்கின்றார் தான் அழகாக இல்லை தனது மனைவி அழகாக இருக்கிறாள் என்று சந்தேகத்தால் மனைவியையே சுற்றி சுற்றி வருகிறார் கருணாஸ்.
மேலும் தனது மனைவி நம்மளை மதிக்க மாட்டார் நம்மள விட்டு போய் விடுவார் என எண்ணி கருணாஸ் நடந்துகொள்ளும் காட்சிகள் தான் இந்த திரைப்படத்தின் கதை இந்த திரைப்படத்தில் கருணாஸ் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் முதன் முதலில் கருணாஸ் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டியது சிம்ரன் தான்.
படத்தின் கதைப்படி சிம்ரன் மாதிரி மிகப்பெரிய ஹீரோயினி வைத்தாள் ஆட்டோமேட்டிக்காக ஓடி போவாள் என நினைப்பார்கள் அதனால் என்னோட தகுதிக்கு சிம்ரன் வேண்டாம் சிம்ரன் மிகப் பெரிய நடிகை என் தகுதிக்கு வேற நடிகை தான் கரெக்ட் எனக் கூறியுள்ளார். அதன்பிறகுதான் நடிகை கார்த்திகா இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வைரலானது அதுமட்டுமில்லாமல் பல காமெடி காட்சிகளும் இடம் பெற்றிருந்ததால் படம் மாபெரும் ஹிட்டடித்தது வெற்றி பெற்றது.