சூர்யாவை தொடர்ந்து அவரது தம்பி கார்த்தி தமிழ் சினிமாவில் சூப்பரான படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை அள்ளி வருகிறார். நடிகர் கார்த்தி தற்பொழுது பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்துள்ளார் அந்த திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
இதில் குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படம் முழுவதும் கார்த்தி நடித்துள்ளார் இதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து விருமன், சர்தார் போன்ற படங்களும் இவருக்கு நல்லதொரு வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்கள் வெற்றிபெறும் பட்சத்தில் கார்த்தியின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் இப்படி ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்தி வருகிறார். இப்படி வாழ்க்கையை வாழ்ந்து வரும் கார்த்திக் சில சமயம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளனி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கி வந்தார்.
இதில் விருந்தினராக கார்த்தி கலந்து கொண்டார் அப்பொழுது சினிமா குறித்தும் வாழ்க்கை குறித்தும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு நடிகர் கார்த்தி பதில் அளித்து வந்தார் அதில் ஒன்றாக டிடி நீங்க எப்பொழுதாவது சிறைக்கு சென்று அல்லது போலீஸ்யிடம் மாட்டியது உண்டா என கேட்டுள்ளனர். அதற்கு நடிகர் கார்த்தி ஒரு தடவை நான் யுஎஸ்ஏவில் நண்பர்களுடன் காரில் போய்க்கொண்டிருந்தேன்.
அந்த சாலையில் 55 கிலோமீட்டர் வேகத்தில் தான் போக வேண்டும் ஆனால் நான் 90 கிலோ மீட்டர் வேகத்தில் போய்க் கொண்டிருந்தேன். உடனே போலீஸ் எங்களை அரஸ் செய்து நீதிமன்றத்தில் நிப்பாட்டி விட்டனர் 250 டாலர் பைன் கட்டி வெளியே வந்தேன் அது என் வாழ்நாளில் மறக்க முடியாது என கூறினார்.