மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த படம் இரண்டு பாகங்களாக பாகங்களாக உருவான நிலையில் முதல் பாகம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.
இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி,திரிஷா ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, லால்,பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், அஸ்வின் காக்கமானு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்தது.
மேலும் இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருந்த நிலையில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்களும் மிகப்பெரிய ரீச்சினை பெற்ற நிலையில் இதனை அடுத்து இந்த படத்தில் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ்க்காக மிகவும் ஆர்வமுடன் ரசிகர்கள் காத்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக் குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் சூப்பர் ஹிட் பெற்ற நிலையில் அதனை அடுத்து இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடலின் முதல் பார்வை நேற்று வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்திக் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அவர் எப்படி வந்தது தன்னை உருவாக்கும் வீடியோவை படக்குழுவினர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் வந்தியதேவன் கதாபாத்திற்கு தேவையான உடைவமைப்பு மற்றும் அகநக பாடலின் சிறப்புக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.