சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என ட்வீட் போட்ட நடிகர் கார்த்திக்.!

karthi
karthi

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் தான் சாண்டி மாஸ்டர் தற்பொழுது இவரைப் பற்றி நடிகர் கார்த்திக் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய ஏன் சாண்டி மிஸ்டர் மீது இவ்வளவு கோபமாக கார்த்தி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

அதாவது சமீபத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் முத்தையா கூட்டணியில் வெளிவந்த விருமன் திரைப்படம் கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.வெள்ளி அன்று வெளியான இந்த திரைப்படம் திங்கள்கிழமை விடுமுறை நாள் வரை வசூலை குவித்து லாபத்தை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை தந்து வருகிறார்கள்.

இருந்தாலும் கொம்பன் திரைப்படம் போலவே இருப்பதாக சிலர் கூறிவரும் நிலை இந்த திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு உடன் இணைந்து அதிதி சங்கர் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் சூரி, பிரகாஷ், ராஜ் கிரண் சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

இவ்வாறு இந்த திரைப்படத்தினையும் தாண்டி யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியிருந்த கஞ்சப்பு கண்ணால, மதுரை வீரன் உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ரீசை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வானம் கிடுகிடுங்க என்ற பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனத்தை வடிவமைத்திருந்தார்  இந்த பாடலின் ஒரு காட்சியில் கார்த்தி பல்டி செய்திருப்பார் அந்த பாடல் அதிகாலை 2-3 மணிக்கு படமாக்கப்பட்டது.

எனவே இதன் காரணமாக நடுராத்திரியில் கார்த்தியை படாத பாடுப்படுத்தியதால் மிஸ்டர் மீது மிகவும் கோபமாக உள்ளார் என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது நடுராத்திரி மூணு மணிக்கு எல்லாம் சாம்மர் சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர் மன்னிக்கவே மாட்டேன் என்று‌  கூறியுள்ளார்.