மீண்டும் ராவாக சினிமாவில் களமிறங்கும் நடிகர் கார்த்திக்..! இனிமேல் தான் ஆட்டம் கலகட்ட போகுது..!

karthik-2

தன்னுடைய மிக சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் நடிகர் கார்த்திக். இவர் ரஜினி கமல் போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த பொழுதே தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தவர்.

இவ்வாறு பிரபலமான நடிகர் ஒரு நேரத்திற்கு பிறகு சரியான வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாததன் காரணமாக சினிமாவில் இருந்து படிப்படியாக விலக ஆரம்பித்து விட்டார்.  இவ்வாறு வெகுகாலமாக சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருந்த கார்த்திக் சமீபத்தில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தில் மட்டுமே நடிப்பேன் என இவர் ஒற்றைக்காலில் நிற்கிறாராம். அந்தவகையில் நடிகர் கார்த்திக் பிரசாந்த் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பு ஆனது ரசிகர்களால் பெருமளவு பேசப்படுவது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் பழைய கார்த்திகை பார்ப்பீர்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை வைத்து தான் கதை உருவாக்குவதாக இயக்குனர் கூறி உள்ளார். அந்தவகையில் இந்த திரைப்படத்தில் கார்த்திக் கதாநாயகனாக இல்லாவிட்டாலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனை விட  முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே கார்த்திக்கை பற்றி இவ்வளவு சுவாரஸ்யமான செய்தி வெளிவந்ததால் காரணமாக இத்திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்தே ஆகவேண்டும் என முடிவு செய்து விட்டார்களாம்.

karthik-1
karthik-1