திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகனாக சுல்தான் படம் பார்த்த கார்த்தி.!! ரசிகர்கள் கொண்டாட்டம்

sulthankarthi
sulthankarthi

ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சுல்தான். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளனர். நடிகர் கார்த்தி தம்பி, கைதி போன்ற ஆக்ஷன் பிளாக் திரைப்படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த சுல்தான் திரைப்படத்தில் தனது சிறந்த ஆக்ஷன் காட்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் எக்ஸ்பிரஷன் குயின் ராஷ்மிகா மந்தனா இந்த திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பே ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் மட்டுமல்லாமல் நடிகர் நெப்போலியன், யோகிபாபு, அபிராமி, பொன்வண்ணன், கே ஜி எப் ராமு, சென்ராயன், எம்எஸ் பாஸ்கர், மயில்சாமி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பற்றி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருமே நல்ல கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ராஷ்மிகா மந்தனா என்ட்ரியாகும் சீனில் திரையரங்கில் ஆரவாரத்துடன் விசில் பறக்க ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர்.. மேலும் நடிகர் கார்த்தி சென்னையில் உள்ள பிரபல திரையரங்குக்கு சர்ப்ரைஸாக விசிட் கொடுத்து ரசிகர்களை பார்த்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர் நடிகர் கார்த்திக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். இப்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

மேலும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை உடைய கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.