தனது மனைவி எடுத்த புகைப்படம் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் கார்த்திக்.!

karthik-wife
karthik-wife

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கார்த்திக்.  இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வாரிசு நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து தனது விடாமுயற்சியினால் ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று தற்பொழுது வரையிலும் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமாக முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதோடு மட்டுமல்லாமல் திரைப்படத்திற்காக பல விருதையும் பெற்றார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் பையா, சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, ஆயிரத்தில் ஒருவன் என பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கண்டது.

இவர் நடிப்பில் கடைசியாக சுல்தான் திரைப்படங்களில் வந்த நிலையில் தற்போது பொன்னின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவரைத் தொடர்ந்து திரிஷா,விக்ரம், பிரபு விக்ரம், ஐஸ்வர்ய லக்ஷ்மி, ஜெயம் ரவி உள்ளிட்ட இன்னும் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணந்து நடித்து வருகிறார்கள்.

இத்திரைப்படம் பெரிய நாவல் ஒன்றை தழுவி பாகம் பாகமாக எடுக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக திரை உலகமே மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.  இப்படிப்பட்ட நிலையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தன்னுடைய லைஃப் பாட்னர் அதாவது அவருடைய மனைவி ரஞ்சனி தான் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பலரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.