மிகப்பெரிய பொருட்ச அளவில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவலை பலராலும் படமாக எடுக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது பலரின் கனவை நினைவாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். ஏன் மணிரத்தினம் கூட 20 ஆண்டு காலங்களாக பொன்னியின் செல்வன் படத்தினை உருவாக்க வேண்டும் என ஆசைப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தினை மணிரத்தினம் இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில் தமிழ்,ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது தற்பொழுது இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலைகள் நேற்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். மேலும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் 6 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர்கள் அறிவித்திருந்த நிலையில் 9 மணி வரையிலும் வெளியாகாத காரணத்தினால் ரசிகர்கள் கடுமையாக திட்டி வருகிறார்கள்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்திக் பத்திரிக்கையாளரிடம் முதலில் கதையை தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேளுங்க என ஜாலியாக கலாய்த்துள்ளார். அதாவது ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து சோழனாக நடித்தீர்களே எனக்கே கேட்க, அதற்கு,நான் சோழ தூதுவனாக தான் நடித்தேன் நீங்க போய் முதலில் கதையை புரிந்து கொண்டு வாங்க என ஜாலியாக கிண்டல் அடித்துள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் கதையில் அந்த காலகட்டத்தில் வாழ்வது போன்று நடிப்பது மிகவும் சவாலான ஒரு விஷயம் என்றும் கார்த்திக் இந்த படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.