வாரிசு நடிகர்களாக அறிமுகமான பலர் சினிமாவில் அவர்கள் செய்த சின்ன சின்ன தவறினால் தற்பொழுது சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வருகிறார்கள். பொதுவாக வாரிசு நடிகர்களாக அறிமுகமாகும் அனைவரும் எளிதில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முடியாது.
அப்படி ஒரு நடிகர் சினிமாவில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருந்தாலும் அவரால் தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தரும் முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான்.
ஆனால் நடிகர் கார்த்திக் திரைப்படம் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வமுடையவராக திகழ்வதால் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் பல வெற்றி படங்களை தந்து வருகிறார்.
அவரின் அண்ணனான சூர்யா கூட ஒரு சில தோல்வி திரைப்படங்களை தந்து தற்போதுதான் சூரரைப்போற்று என்ற வெற்றி திரைப்படத்தை தந்துள்ளார். கார்த்திக் தற்போது இந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கூட அவர் நடித்திருந்த சுல்தான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்பொழுது கார்த்திக் எப்படிப்பட்ட நடிகர் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நடிகர்கள் என்றால் சண்டைக்காட்சி போன்றவற்றில் திமிராக காட்டுவதற்காகவும் பெண்கள் மத்தியில் மிகவும் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதற்காக சிகரெட் குடிப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தனுஷ், விஜய்,அஜித், ரஜினி என அனைவருமே சிகரெட் குடிக்கும் காட்சியில் நடித்து இருக்கிறார்கள்.
கார்த்திக் இதுவரையிலும் சினிமாவிற்கு அறிமுகமாகி கிட்டதட்ட இருபது வருடங்கள் முடிந்து விட்டது அந்த வகையில் பல வெற்றிப் படங்களையும் தந்துள்ளார். இதுவரையிலும் ஒரு முறை கூட சிகரெட் குடித்த காட்சியில் நடித்தது இல்லை இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது அந்த காட்சியில் நடித்தால் கோடி ரூபாய் தருவதாகக் கூறினாலும் நான் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளாராம் இதனை அறிந்த கார்த்திக்கின் ரசிகர்கள் கார்த்திக்கு பாராட்டுகளை கூறி வருகிறார்கள்.