தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக்.பெரும்பாலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் பல கோடி வசூலித்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் நடிப்பில் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை முழு வீச்சு பட குழுவினர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். கிராம கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தாலும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.
மேலும் இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இதன் காரணமாக தற்பொழுது கார்த்தி மற்றும் அதிதி சங்கர் இருவரும் ப்ரோமோஷன் பணிகளுக்காக மலேசியா சென்றுள்ளார்கள். அங்கு சென்று சில நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்பி நிலையில் இவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.
அவ்வபொழுது நடிகர் கார்த்திக் அடுத்ததாக இயக்குனர் ராஜ் முருகன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வாசிப்பாளரிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விருமன் படத்தின் பாடல் ஆசிரியர்களின் ஒருவரான இயக்குனர் ராஜ் முருகன் இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.
எனவே நிலையில் தனது அடுத்த படத்தில் நடிகர் கார்த்திக்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தமிழில் குக்கூ, ஜிப்சி, ஜோக்கர் ஆகிய படங்களை ராஜூ முருகன் இயக்கிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அதிதி சங்கர், கார்த்திக் இவர்கள் நடித்துள்ள விருமன் திரைப்படத்தினை முத்தையா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களைத் தொடர்ந்து சரண்யா பொன்வண்ணன், சூரி, பிரகாஷ் ராஜ்,ராஜ்கிரன் ஆகியோர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்,இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.