தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் இவர் பிரபல முன்னணி நடிகரின் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதேபோல இவருடைய அண்ணன் சூர்யாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பிரபலமான நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பருத்தி வீரன் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளை வெல்வதற்கு வழிவகுத்தது.
இவ்வாறு இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து தன் மூலமாக நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக் சமீபத்தில் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஆர்வமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படமான சர்தார் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தினை பிஎஸ் மித்ரன் அவர்கள் தான் இயக்கி வருவதாக தெரியவந்துள்ளது நீங்களும் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே நடிகர் கார்த்திக் சிறுத்தை திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து ஜெயித்துக் காட்டியுள்ளார். அந்த வகையில் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் மூலமாக ரசிகர்கள் இந்த திரைப்படத்தினை பார்க்க மிக அதிக அளவு ஆர்வத்துடன் திரண்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அவர் நடிக்கும் சர்தார் திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது அதில் நடிகர் கார்த்திக்கு வயதான தோற்றத்துடன் இருப்பது மட்டுமில்லாமல் நரைத்த தாடி முடியுடன் வெளியான புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.