தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து பெரிய பட்ஜெட் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவருடைய அடுத்த படத்தினை இயக்கும் இயக்குனர் குறித்த தகவலும், இன்று அந்த படத்திற்கான பூஜை நடைபெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக் சில காலங்களாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் சோலோவாக நடிக்கும் இவருடைய எந்த படமும் இதுவரையிலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் 2வது பாகத்தின் கடைப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் இந்த பட வருகின்ற 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனை அடுத்து கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் என்ற படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் மேலும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தினை நலன் குமாரசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற இருப்பதாகவும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என கூறியிருக்கும் நிலையில் எந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா நடித்த வரும் ‘சூரியா 42’ மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் மேலும் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் கார்த்தியின் அடுத்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தமாகி உள்ளது. மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சிம்புவின் பத்து தல திரைப்படம் வருகின்ற 30ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக உள்ளது.