தீபாவளி அன்றும் ஏமாற்றம் தான்.. முதல் நாளை விட 3வது நாளில் குறைந்த ஜப்பான் வசூல்..

Japan Movie
Japan Movie

Japan Box Office Day 3: கார்த்தி நடிப்பில் ஜப்பான் படம் தீபாவளி ஸ்பெஷல் ஆக 10ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் 3 நாள் இறுதியில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜப்பான் படம் மிகவும் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தினை ராஜூ முருகன் இயக்க அனு இமானுவேல், சுனில், ஜித்தன் ரமேஷ் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கார்த்தியின் ஜப்பான் படம் மட்டுமல்ல ஏராளமான கோலிவுட் நடிகர்களின் 25வது படம் தோல்விதான்.. இந்த லிஸ்டில் இருந்து தப்பித்த அஜித், தனுஷ், சூர்யா..

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு உருவான கார்த்தியின் ஜப்பான் தீபாவளி ஸ்பெஷல் ஆக வெளியிடப்பட்டது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது கார்த்தியின் 25வது படம் என்பதால் விஷால், ஆர்யா, லோகேஷ் கனகராஜ்  என ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

கார் போன விஷயத்தை அப்பாவிடம் மறைத்து வேறு வேலை தேடும் முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் கதை மொக்கையாக இருப்பதாக ஜப்பான் படத்தினை ரசிகர்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வருகிறார்கள். வெளியான இரண்டு நாட்களாகவே வசூல் சுமாராக இருந்த நிலையில் தீபாவளி அன்று வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சுமாரான வசூலை தான் மூன்றாவது நாளிலும் ஈட்டி உள்ளது. மேலும் முதல் நாளை விட 3வது நாள் வசூல் குறைந்திருப்பது படக் குழுவினர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தீபாவளி தினத்தில் மட்டும் ரூபாய் 4 கோடி வசூல் செய்துள்ளதாம் முதல் நாளில் ரூபாய் 4.5 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது எனவே முதல் நாளை விட 3வது நாளில் வசூல் குறைந்துள்ளது.