இதுவரையிலும் ஏற்றிடாத கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் கார்த்திக்.!

karthik
karthik

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் நடிகர் கார்த்திக் தொடர்ந்து வித்யாசமான வேடங்களில் ஏற்று நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக அவருடைய திரைப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெற்றி பெறுவது நாம் அனைவரும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் நடிகர் கார்த்திக் நடிப்பில் இறுதியாக வெளிவந்த விருமன்.

இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. திரைப்படத்தினை முத்தையா இயக்க சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றாலும் பல கோடி வசூல் செய்தது என்பதை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை இயக்குனர் ராஜ் முருகன் இயக்க இருக்கிறார் இந்நிலையில் இந்த படத்தில் இதுவரையிலும் ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை ராஜ் முருகன் இயக்குகிறார்.

மேலும் இவர் இதற்கு முன்பு குக்கூ, ஜோக்கர்,ஜிப்சி ஆகிய படங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கார்த்திக் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக ராஜ் முருகன் திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது இதற்காக ஒத்திகை பயிற்சியில் கார்த்திக்கு ஈடுபட்டு வருவதாகவும் படக் குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியதேவன் என்ற கேரக்டரின் நடித்துள்ளார் கார்த்திக் இந்த படத்தில் டூம் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக பட குழுவினர்களிடம் பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.