நடிகர் கார்த்திக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களுடைய கூட்டணிக்கு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிக்கு வாழ்த்துக்கள் என கூறி பதிவிட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் செய்து கொண்ட நான்கு மாதங்களிலேயே தாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தனர் அதாவது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இரண்டு ஆண் குழந்தைகளின் காலை பிடித்துக் கொண்டு நயன்தாரா, விக்கி இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்
இதனை பார்த்தவுடன் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள் மேலும் ஒரு அறிவிப்பு கூட இல்லாமல் எப்படியும் உங்களுக்கு குழந்தை பிறந்தது எனும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும் இது மிகவும் குற்றம் எனவும் பலரும் தெரிவித்து வந்த நிலையில் பிறகு இவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை என தெரியவந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் இது குறித்து நடிகர் கார்த்திக் பெற்றோர்கள் என்ற எங்களுடைய கூட்டணிக்கு வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் வாழ்த்துக்கள் அன்று தெரிவித்துள்ளார். மேலும் என்றும் நீங்கள் நால்வரும் நலமுடன் இருக்க கடவுளை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடிகர் கார்த்திக்கின் பதிவை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், வாழ்த்துக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். இவ்வாறு நடிகை நயன்தாரா வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதால் பலரும் இதனை விமர்சித்து வருகிறார்கள் மேலும் இவருடைய அழகு குறைந்த விடக்கூடாது என்பதற்காக தான் இவ்வாறு செய்ததாகவும் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.