நடிகர் கார்த்திக் ரசிகர் மீது கை வைத்து மாட்டிக் கொண்ட போலீஸ் அதிகாரி..! அச்சச்சோ போலீசுக்கே இப்படி ஒரு தண்டனையா..?

karthik-1
karthik-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நடிகர் சிவகுமாரின் மகன் என்பது மட்டுமின்றி நடிகர் சூர்யாவின் தம்பி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் நமது நடிகர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படம் கிராமத்து கதாபாத்திரம் கொண்ட திரைப்படமாக அமைந்தாலும் மாபெரும் வெற்றி கண்டது

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் கார்த்திக் அவர்கள் தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு தூத்துக்குடியில் கார்த்திக் நடித்த திரைப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் 3 பேர் ஒட்டி உள்ளார்கள்.

அப்பொழுது அந்த வழியே சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கார்த்திக் ரசிகர்களே அடித்து உடைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காரணமாக கார்த்திக் ரசிகர்கள் வேங்கடகோடி, வெங்கடேஷ் மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்

இவ்வாறு அந்த புகார் மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது மட்டுமில்லாமல் அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் கார்த்திக் ரசிகர்களை அழைத்து மனித உரிமை மீறலை எதிர்கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக விதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் மற்ற இருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்த தொகையை தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.