நடிகர் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் அவரது திறமையும் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிய..
நடிகர் கார்த்திக்கு அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை பெற்று தருவதால் அதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் கார்த்தி கையில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு படத்திலும் கார்த்தி வித்தியாசமாக நடித்துள்ளதால் அந்தெந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் படம் முழுக்க இவர் நடித்துள்ளதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
அதைத்தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்க.. ஒரு பக்கம் நடிகர் கார்த்தி பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் இந்த நிலையில் நடிகர் கார்த்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் தனது தாடியை எடுத்துள்ளார்.
தற்பொழுது புதிய கேட்டபில் இருக்கும் கார்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த போட்டோவை வெளியிட்டு இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சமீபகாலமாக நடிகர் கார்த்தி பெரும்பாலும் தாடி உடன் படங்களில் நடித்துள்ளாராம் இப்பொழுது புதிய படத்தில் நடிக்கவோ அல்லது ஒரு சேஞ்சிக்காகவோ தற்பொழுது தான் தாடியை அவர் எடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது இதோ நீங்களே பாருங்கள் புதிய கெட்டபில் அசத்தும் நடிகர் கார்த்தி.