கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தியின் சர்தார் திரைப்படம் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
அவருடன் கைகோர்த்து ராசி கண்ணா, முனீஸ் காந்த்.. மற்றும் லைலா போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படத்தை எஸ்பி மித்திரன் இயக்கியிருந்தார் படம் நல்ல வெற்றியை ருசித்திருந்தாலும் கார்த்திக்கும் இயக்குனர் எஸ் பி மித்திரனுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது.
சர்தார் படப்பிடிப்பு தளத்தில் கார்த்தி மற்றும் மித்திரனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது அது மட்டும் இன்றி இயக்குனர் இல்லாத சமயத்தில் கார்த்தி சர்தார் படத்தில் டப்பிங் பேசியுள்ளார் இதனால் மித்திரன் வந்த பிறகு அது சரி இல்லை இது சரி இல்லை என சொல்லி இருக்கிறார்.
இதனால் கார்த்தி கடுப்பாகி உள்ளார் அதிலிருந்து இவர்கள் இருவருக்குமே ஒத்து வரவில்லையாம். இதனால் கார்த்தி இயக்குனர் எஸ் பி மித்திரனை ஒதுக்கி உள்ளார் ஏன் அண்மையில் கூட தீபாவளியை முன்னிட்டு கார்த்தி தனது வீட்டில் பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் இதில் ராதிகா, கார்த்தி, சூர்யா, ஜோதிகா, சிவகுமார், போன்ற பலர் கலந்து கொண்டனர்.
மேலும் சர்தார் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களும் கலந்து கொண்டனர் ஆனால் எஸ்பி மித்திரனை மட்டும் அழைக்கவே இல்லை.. இதை அறிந்த ரசிகர்கள் எப்படி இருந்தாலும் உங்களுக்கும் அவர் ஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார். பிரச்சனைகளை மறந்து கொண்டாட வேண்டிய விஷயம் எனக்கூறி சொல்லி வருகின்றனர்..