15 வருடங்களில் 25 படங்கள்.. வந்திய தேவனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அசந்து போன ரசிகர்கள்..

karthi
karthi

இயக்குனராக வேண்டுமென்ற கனவுடன் அமெரிக்கா சென்று படித்துவிட்டு சென்னை திரும்பியவர் தான் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி. இவர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக சில வருடங்கள் பணியாற்றி வந்த நிலையில் பிறகு அமீரின் பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய முதல் திரைப்படமே இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு என வாய்ப்புகளை பெற்றார்.

சூர்யா அறிமுகமான காலகட்டத்தில் சில வருடங்களாக தொடர்ந்து கஷ்டப்பட்டு ஒரு இடத்தை பிடித்தார் ஆனால் முதல் திரைப்படமே கார்த்திக் மிகப்பெரிய இடத்தை பிடித்து தந்தது. அந்த வகையில் தற்போது வரையிலும் தொடர்ந்து நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அப்படி கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது தான் கைதி. இந்த படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. மேலும் இதனை அடுத்து தற்பொழுது குரு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியதேவனாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் மூலம் ஏராளமான பெண்களின் மனதை கவர்ந்த நிலையில் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தற்பொழுது இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது அதாவது கார்த்தி சினிமாவிற்கு அறிமுகமாகி 15 வருடங்கள் ஆகியுள்ளது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தற்போது வரையிலும் வெற்றினை கண்டு வரும் நிலையில் மொத்தம் 25 படங்களில் நடித்துள்ளார்.

அதன்படி தற்பொழுது ஒரு படத்திற்கு கார்த்தி 8லிருந்து 10 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார் மேலும் இந்திய ரூபாயில் கார்த்திகை 97 கோடி சொத்து மதிப்பு உள்ளது. சென்னை தியாகராய நகரில் 30 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு வைத்துள்ளார் இது தவிர ஏராளமான இடங்களில் பிளாட்டு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விலையுயர்ந்த கார்கள் வைத்திருக்கும் நிலையில் அதன்படி ஆடி மற்றும் Mercedes Benz ML350 போன்ற கார்களையும் வைத்துள்ளார். இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜப்பான் படம் வெளியாகி உள்ளது பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு ஏராளமான படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார் கார்த்தி.