சினிமா உலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் சிவகுமாரின் மகன் சூர்யா அவரைத் தொடர்ந்து அவரது தம்பி கார்த்தியும் தற்போது சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார்.
இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருகின்றன அந்த வகையில் இந்த வருடத்தில் இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படமும் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.
அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிக்கின்றன. அவர் கையில் மொத்தம் எத்தனை திரைப்படங்கள் இருக்கிறது என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.. முதலில் ராஜு முருகனுக்கு இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ஜப்பான் இந்த திரைப்படம் அவருக்கு 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலானது படம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியிட படக்குழு திட்டம் போட்டு இருக்கிறதாம் அதே போல பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் பிறகு நடிகர் கார்த்தி அருண்ராஜா காமராஜ் உடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் ஒப்பந்தமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம். இந்த படங்களை முடித்துவிட்டு சர்தார் 2, கைதி 2 போன்ற படங்களிலும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது இதனால் அடுத்த இரண்டு வருடத்திற்கு கார்த்திகையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருப்பதாக தெரிய வருகிறது. இதனால் 2024 ஆம் ஆண்டுக்கு வரை கார்த்தி பிஸியான ஒரு ஹீரோவாக ஓடுவார் என கூறப்படுகிறது.