தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திக் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி என்று சொன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வர ஒரு படம் பருத்திவீரன் தான்.அந்த திரைப்படம் தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் மறக்காத ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. கார்த்தி அந்த அளவிற்கு அந்த திரைப்படத்தை உள்வாங்கி மிகவும் தத்ரூபமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
அந்தப்படத்தை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு அருமையான ஒரு நடிப்பு. கார்த்தி நடித்த காஷ்மோரா படம் அனைவருக்கும் தெரியும் மிகவும் வித்தியாசமாக இரு வேறு வேடங்களில் நடித்திருப்பார். அதன்பிறகு அவர் நடித்த அனைத்து படங்களிலும் அவரைப்பற்றி எவ்வித குறையும் இல்லாமல் எதார்த்தமான நடிப்பில் நடித்து அசத்திருப்பார்.
இவரது தந்தை சிவக்குமாரும் மிக அருமையான நடிகர். மேலும் இவரது அண்ணன் சூர்யா அனைத்தையும் தாண்டி ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் மூழ்கி நடித்திருப்பார். தற்போது கார்த்தி குதிரை சவாரி பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வைத்தார் அது என்னவென்றால், “எனக்கு குதிரை என்றால் மிகவும் பிடிக்கும் காஷ்மோரா படத்திற்காக குதிரை சவாரி செய்ய கற்றுக் கொண்டாலும் பொன்னியின் செல்வன் படத்தில் தான் நீண்ட நேரம் குதிரை சவாரி செய்ய வாய்ப்பு கிடைத்தது அதில் விவரிக்க முடியாத உற்சாகம் கிடைத்தது” என்று ட்விட்டரில் கருத்து பகிர்ந்திருந்தார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி அவர்களது கதாபாத்திரத்தின் வேடத்தை ரசிக்க காத்திருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் கார்த்தி இல்லை என்பது மிகவும் உருக்கமாகவே உள்ளது இது ரசிகர்களிடையே வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காஷ்மோரா படத்திலும் சரி, தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் சரி அவர் குதிரை சவாரி செய்யும் அழகே தனி சிறப்புமிக்கது. அவர் மீண்டும் குதிரை சவாரி செய்வதை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்