actor kamalhasan before avaishanmugi maami getup this getup was first he did photo: உலக நாயகன் கமலஹாசன் தான் நடிக்கும் திரைப்படத்தின் மூலம் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தி வைத்தார், அந்தவகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் அவ்வை சண்முகி, அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருப்பார்.
அவ்வை சண்முகி திரைப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஹிந்தியில் சாச்சி 420 என வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூலிலும் கல்லா கட்டியது.
உலகநாயகன் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் மாமி கேட்டப் போட்டிருப்பார், தன்னிடம் பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காகவும் தில்லுமுல்லு செய்து மாமி கேட்டப்பில் அவர்களது வீட்டிற்கு செல்வார்.
மாமி கேட்டப்பில் இருந்ததால் மீனாவின் அப்பா மாமியை பிடித்துப் போக அவர் மீது ஆசைப்படுவார், அதுல இருந்து எப்படி மேலே போகிறார் தனது குழந்தை மற்றும் மனைவியின் மனதில் இடம் பிடித்தார் என்பது தான் படத்தின் கதை.
கமலஹாசன் போட்ட மாமி கேட்டப்பிற்கு படக்குழு மிகவும் சிரமப்பட்டார்கள், இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக முதன் முதலில் கமலஹாசன் போட்ட பெண் கெட்டப் படத்தில் வருவது கிடையாதாம், கமல்ஹாசன் போட்ட முதல் மாமி கெட்டப் இதுதானாம்.
இதோ அந்தப் புகைப்படம்.