தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் உலக நாயகன் கமலஹாசன் இருப்பினும் இவர் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே தென்படவில்லை இந்த நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் நடித்தார். மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த போகவே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது இதுவரை மட்டுமே அந்த திரைப்படம் 420 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் இந்தியன் 2, தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் கமல் பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
கமலஹாசன் கௌதம் மேனன்னுடன் கைகோர்த்து 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் திரில்லர் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்தது இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் சூப்பர் ஹிட் அடித்தது ஆனால் இந்த படம் உருவாக்க பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் படக்குழு சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு படத்தின் கதையை கமலிடம் கூற அது ரொம்ப பிடித்த போக படமாக உருவாகியது 2005 ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தயாரிப்பாளர் காஜா மொய்தீன் பொருளாதார பிரச்சினைகளால் தடைபட்டது பிறகு ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பு கோரிக்கையை ஏற்றார் அவரும் உடனடியாக கைகழுவினார்.
இனி இந்த படம் நகராது அவ்வளவுதான் என சொல்லினார்கள் ஆனால் கடைசியாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனிடம் பேசினார். கௌதம் அவர் இந்த படத்தை தொடர ஒப்புக்கொண்டார் உடனடியாக படத்தில் வரும் அமெரிக்க காட்சிகள் எடுக்க ஏற்பாடு செய்தார் அமெரிக்காவில் தாமதமாக படபிடிப்பு தொடங்கப்பட்டது முதலில் மஞ்சள் வெயில் மாலையிலே பாடல் காட்சியை எடுத்தனர் அதில் கமல் நடந்து போய்க்கொண்டிருப்பார்.
இப்படி என்னை நடிக்க விடாமல் படம் எடுத்தால் எப்படி ஓடும் காசை வேஸ்ட் பண்ற என கமல் போன் போட்டு தயாரிப்பாளரை எச்சரித்தார் அதே போல் படப்பிடிப்பு தளத்தில் கேரவன் கிடையாது ஏதாவது ஒரு ஓய்வறையில் தான் டிரஸ்சை மாற்ற வேண்டும் உட்காரா நாற்காலியும் கிடையாது என தயாரிப்பாளருக்கு போன் போட்டு கடுமையாக சாட்டி உள்ளார் கமல் ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நாற்காலிக்கு ஏற்பாடு செய்திருக்கிறாராம். இந்த படம் நடித்து முடிவதற்குள் கமல் ஒரு வழி ஆகிவிட்டதாம்.