தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற போற்ற படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் மற்றொரு திரைப்படத்திலும் நடிகர் கமலஹாசன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பொதுவாக கமல் நடித்த காலகட்டத்தில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அந்தவகையில் இவர்களுடைய நடிப்பை பலரும் பாராட்டி மட்டும் இல்லாமல் இவர்கள் நடிப்பில் வெளியான ஒவ்வொரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது. அந்த வகையில் மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கருமை நிறம் சிகப்பு போன்ற திரைப்படங்கள் ஆகும்.
இவ்வாறு இவர்கள் இணைந்து திரைப்படம் நடிக்கும் போது இவர்கள் இருவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் பின்னர் அந்த நெருக்கம் காதலாக மாறியதாக பலரும் கூறுவது வழக்கம்தான்.
அந்த வகையில் இவ்வாறு ரசிகர்கள் பேசும் நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் அம்மா கூட நடிகர் கமல்ஹாசனிடம் என்னுடைய மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நேரடியாக ஒரு முறை கேட்டு இருந்தாராம்.
இதற்கு பதிலளித்த நடிகர் கமலஹாசன் நான் பல திரைப்படங்களில் ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்துள்ளேன். அப்போது ஸ்ரீதேவி என்னை எப்பொழுதுமே சார் என்று தான் அழைப்பார் அதே போல நானும் ஸ்ரீதேவியை ஒரு தங்கை போல தான் பார்க்கிறேன் ஆகையால் நீங்கள் இப்படி பேசுவது மிகவும் தவறு என கூறிவிட்டாராம்.