கமல் நடிப்பில் கடைசியாக வெளி வந்த இந்தியன் 2 எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அது கூட பரவாயில்லை ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு அப்படம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறிப்போனது.
அதை அடுத்து மூன்றாம் பாகமும் வெளிவர இருக்கிறது. இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் அடுத்த பாகத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டு விடலாமா என்ற ரீதியில் தயாரிப்பு தரப்பு ஒரு பக்கம் யோசித்து வருகிறது.
ஆனால் ஆண்டவரோ அடுத்தடுத்த படங்களில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். அவருடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.
அதேபோல் மணிரத்தினம் கூட்டணியில் கமல் நடித்திருக்கும் தக்லைப் படத்திற்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஆண்டவரின் புது போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புதிய தோற்றத்துடன் புதிய பயணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போட்டோவில் ஆண்டவர் குறுந்தாடி வைத்துக்கொண்டு மிரட்டும் பார்வையுடன் இருக்கிறார். இதுதான் அவருடைய அடுத்த படத்தின் கெட்டப் என தெரிகிறது.
மணிரத்னம் படத்திற்கு பிறகு அவர் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு முன்பே வெளிவந்தது. அந்தப் படத்திற்காக தான் ஆண்டவர் தற்போது தயாராகி இருக்கிறார்.
ஆனால் இந்த குறுந்தாடியை பார்க்கும்போது பஞ்சதந்திரம் படம் நினைவுக்கு வருகிறது. ஒரு வேளை அதன் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. எது எப்படி இருந்தாலும் விரைவில் ஒரு அசத்தல் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.