இன்று பலரும் ரசித்து ரசித்து பார்க்கும் கமலின் இந்த இரண்டு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நிலைமை என்ன தெரியுமா.? தலையில் துண்டு போட வச்சுட்டாங்களே.

kamal
kamal

இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படும் நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் ஒருவர் எந்த அளவு இவர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளாரோ அதற்கு இணையாக தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார்.  அதிலும் கமல் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் நிலைமை நடுத்தெருவுக்கு வந்த கதையும் உண்டு.

எப்பொழுதும் நடிகர் கமலஹாசன் திரைப்படம் என்றாலே காலம் கடந்த யோசிப்பார் அதாவது இன்றைய காலகட்டத்தில் நடப்பதை விட எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை சிந்திப்பார். அதனால்தான் கமலஹாசன் பல திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புரியாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

சொல்லப்போனால் ஆளவந்தான் திரைப்படம் மாபெரும் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஆனால் ரசிகர்களுக்கு புரியவில்லை அதனால் போட்ட காசு பாதி கூட எடுக்க முடியாமல் போனது. அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தானு அப்பொழுது ஒரு பேட்டியில் ஆளவந்தான் என்னை அழிக்க வந்தவன் என  செம கடுப்பாக பேசினார்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தாணுவை போல ஒரு தயாரிப்பாளர் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்தவர் .அவர் பெயர்தான் தேனப்பன் இவர் கமல்ஹாசன் நடித்த இரண்டு திரைப்படங்களை தயாரித்து கடனால் நடுத்தெருவுக்கு வந்து விட்டார் இதனை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது கமலை வைத்து முதன்முதலாக காதலா காதலா என்ற திரைப்படத்தை தயாரித்தார் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தால் அடுத்ததாக மீண்டும் இவரை வைத்து பம்மல் கே சம்பந்தம் என்ற திரைப்படத்தை தயாரித்தார். ஆனால் அப்பொழுது உள்ள மக்களிடம் அந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற வில்லை ஏனென்றால் படம் சரியாக புரியவில்லை அதனால் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் அடுத்ததாக விட்டதைப் பிடிக்க வேண்டுமென பஞ்சதந்திரம் திரைப்படத்தையும் தயாரித்தார் அந்த திரைப்படமும் மக்களிடம் ரிச்சாகவில்லை அதனால் தோல்வியை சந்தித்தது இதனால் படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் மிகப்பெரிய கடனாளி ஆனார்.

இன்று கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய பஞ்சதந்திரம் திரைப்படத்தை பலரும் ரசித்து ரசித்து பார்க்கிறார்கள் ஆனால் அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் புரியாமல் போனதால் வியாபாரரீதியாக பஞ்சதந்திரம் திரைப்படம் மாபெரும் தோல்வியை அடைந்தது .இதனை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார்.

பம்மல் கே சம்பந்தம் மற்றும் பஞ்சதந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களாளும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார் தயாரிப்பாளர் தேனப்பன்.