அண்மை காலமாக சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன ஆனால் ஒரே ஒரு இயக்குனர் மட்டும் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரையிலும் தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் ஷங்கர்.
இவர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன அந்த காரணத்தினால் அவர் படங்களில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் மிகப்பெரிய உச்சத்தை எட்டி உள்ளனர்.பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் சின்ன கதையாக இருந்தாலும் அதை பிரமாண்டமாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பதில் கை தேர்ந்தவர்.
இவரை பின் தொடர்ந்த பல தமிழ் சினிமா இயக்குனர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுத்து வெற்றி தோல்வி கண்டுள்ளனர் அப்படித்தான் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். கே எஸ் ரவிகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தசாவதாரம் படம் எடுக்கும் பொழுது முதலில் அதன் பட்ஜெட் மிக சிறியது.
அதன் பிறகு அதற்கான திரைக்கதையை விவரிக்கும் பொழுது அது மிகப்பெரியதாக மாறியதே இதனை நான் செய்து விடுவேனோ என்ற சந்தேகமும் வந்தது கமல் சார்தான் இது சரியாக வரும் நீங்கள் படத்தை எடுங்கள் என கூறினார் .
எனக்கு சந்தேகம் இந்த மாதிரி பிரம்மாண்ட படங்களை ஷங்கர் தான் இயக்குவார் அவரை பார்த்து நான் சூடு போட்டுக்கொண்ட மாதிரி ஆகி விடுமோ என்று பயந்தேன் இருந்தாலும் கமல் கொடுத்த தைரியத்தால் படம் நல்லபடியாக வந்தது. படமும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது என கூறினார் கேஎஸ் ரவிக்குமார்.