விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியை மோதவிட்டு அழகு பார்க்கும் நடிகர் கமல்..! யாருடைய கூட்டணியில் தெரியுமா..?

kamal
kamal

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கதை எழுதுவது திரைப்படம் இயக்குவது தயாரிப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 திரைப்படத்திலும் நடிகர் கமல் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் கமல் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தானே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இவர் நடிக்கப்போகும் கதையை நடிகர் கமல்தான் எழுதி உள்ளாராம் மேலும் இயக்குனராக மகேஷ் நாராயணன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விக்ரம் ஆகிய இருவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் கமலுக்கு சின்ன கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் மீதமுள்ள படம் முழுவதும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி நடிப்புகள் தான் இருக்கும் என கூறியுள்ளார்.அந்த வகையில் படத்திற்கு வில்லன் விக்ரமா இல்லை விஜய் சேதுபதியா என தெரிந்துகொள்ள பலரும் ஆர்வத்துடன்  இருக்கிறார்கள்.