தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர் தான் பா ரஞ்சித். இவ்வாறு இவர் இயக்கிய முதல் திரைப்படம் மாபெரும் காமெடி கலந்த திரைப்படமாக அமைந்ததன் காரணமாக வெற்றியை நிலைநாட்டி விட்டார்.
அந்தவகையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக்கை வைத்து மெட்ராஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து காலா கபாலி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்தவகையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனராகவும் பெயர் எடுத்துவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் ரஞ்சித் அவர்கள் ஆர்யாவை வைத்து சார்பாட்ட பரம்பரை என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த படமானது சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதன் காரணமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டது.
அதுமட்டுமில்லாமல் தியேட்டரில் வெளிவராமல் இணையத்தில் வெளியான இத்திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி கண்டது மட்டுமில்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கியது இவ்வாறு இவர் இயக்கிய இத்திரைப்படத்தை பல்வேறு சினிமா பிரபலங்களும் பாராட்டிய நிலையில் அதில் கமலும் ஒருவர்.
இதனை தொடர்ந்து பா ரஞ்சித் நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் அவர்கள் விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்நிலையில் திரைப்பட படப்பிடிப்பு முடிந்த உடன் பா ரஞ்சித் உடன் கூட்டணி வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் கடந்த 7ஆம் தேதி கமலின் பிறந்த நாளன்று பா ரஞ்சித் ஒரு கதையை கமலிடம் கூறினாராம் இந்த கதை கமலுக்கு ரொம்பவும் பிடித்த காரணமாக ஓகே சொல்லிவிட்டாராம். மிக விரைவில் இத்திரைப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.