தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகர் சிம்பு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்த நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றினை தொடர்ந்து தற்பொழுது பத்து தல திரைப்படத்தின் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை பற்றி தகவல் வெளியாகிய நிலையில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் நான் மாநாடு. இந்த படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியிருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த படம் கன்னடத்தில் வெளியான ‘முப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் காண பத்து தல திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். கன்னடத்தில் தூ அங்கு சிவராஜ்குமார் நடித்த தாத்தா வேடத்தில் தமிழில் சிம்பு நடித்துள்ளார் மேலும் இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது. மேலும் இவர்களை தொடர்ந்து கௌதம் கார்த்திக் இந்த படத்தில் முக்கியம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிம்புவின் காட்சிகள் குறைந்த அளவு இருக்கும் எனவும் ஆனால் அதற்காக கடுமையாக உழைத்து இருப்பதாகவும் படக்குழுவினர்கள் சில காட்சிகளை வெளியிட்டு இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தினை ராஜ்கமால் பிலிம் சார்பாக கமல் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதன் காரணமாக இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகளை களம் இறக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயன் படத்தையும் ராஜ்கமல் ப்ளீஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது இவ்வாறு சிம்புவுடன் கமல் கூட்டணி அமைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.