தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சமீபத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகர் கமல் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் இவருடன் பகத் பாசில் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் நடிக்க உள்ளார்கள்.
அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்கள். இவ்வாறு இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த காட்சி செம ஹிட் கொடுக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.
பொதுவாக தன்னுடைய திரைப்படங்களில் எவ்வளவு கதாநாயகர்கள் நடித்து இருந்தாலும் அதை எதையுமே பொருட்படுத்தாமல் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டுவதில் வல்லவர் என்றால் அது கமலஹாசன் தான் அதேபோலதான் இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய முழு திறமையையும் இத்திரைப்படத்தில் வெளிக்காட்டி உள்ளாராம்.
பொதுவாக நடிகர் கமலுக்கு தமிழ் மொழி மட்டுமின்றி உலக அளவில் மாபெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் தற்போது தான் நடிக்கும் திரைப்படத்தினை தமிழ்மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் மொழிபெயர்க்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பொதுவாக நடிகர் கமல் பிசியானவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் அவரால் இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக திரைப்படங்கள் நடிக்க முடியாது ஆகையால் இப்படி ஒரு முடிவு எடுத்தால் இந்த திரைப்படமானது இரண்டு மொழிகளிலும் வசூலை வாரி குவிக்கும் என திட்டமிட்டுள்ளார்.