தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல் இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது இவருக்கு 67 வயதாகியும் திரைப்படங்களிலும், நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் என சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து சீசன்களிலும் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து விலகினார். தொடர்ந்து பணியாற்றி வருவதால் உடல் நிலையில் அடிக்கடி பாதிக்கப்படுவதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தினை பற்றி அதிக எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் தற்பொழுது முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது தனது மகள் சுருதிஹாசனை விட 7 வயது குறைவாக இருக்கும் நடிகையுடன் அதிகப்படியான ரொமான்ஸில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகை வேறு யாருமில்லை 29 வயது மட்டுமே ஆகும் கன்னட நடிகை ஷன்வி ஸ்ரீவஸ்தவா தான்.
இவ்வாறு தனது மகளுடன் குறைவான வயதுடைய நடிகையுடன் கமல் இப்படி நெருக்கம் காட்டுவது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தினை பார்ப்பதற்காக மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை.