தேர்தல்ல விட்ட பணத்தை எப்படி வாங்குவோம்ல!! அதிரடியாக களம் இறங்கிய கமல்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..

kamal hassan
kamal hassan

தொடர்ந்து மற்ற நடிகர்களை விடவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தற்பொழுது  தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன். இவர் சினிமாவையும் தாண்டி சில வருடங்களாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் வெற்றி பெறும் நிலையில் இருந்து சில ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

இதுகுறித்து கமலஹாசன் இந்த தேடுதலினால் எனக்கு 200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  நான் அரசியலுக்கு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் வந்தேன் என்று கூறியிருந்தார்.  இதேபோல்  பிரச்சாரத்தின் போதும் எங்களுக்கு பணம் சம்பாதிக்க வேறு வழி உள்ளது அரசியலில் தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது இல்லை உங்களின் நலனிற்காக தான் நான் போராடுகிறேன் என்று கூறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

எனவே இவரின் தோல்வி ஏராளமான ரசிகர்களை வருத்தமடையச் செய்தது. எனவே அரசியலில் விட்ட 200 கோடியை சினிமாவில் 2 மடங்குகளாக பெற்று விட வேண்டும் என கமலஹாசன் உறுதியாக உள்ளாராம். இதனால் தனது இளம் வயதில் ஹீரோவாக நடித்ததை  விட தற்போது தான் அதிக சுறுசுறுப்புடன் இருந்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

எனவே தொடர்ந்து திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி உள்ள இவர் அடுத்தடுத்து 6 திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.அந்த லிஸ்டை தற்போது பார்ப்போம். முதலாவுதாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்வுடன் இணைந்து விக்ரம், ஜீத்து ஜோசப் இயக்கும் பாபநாசம் 2, முருகதாஸுடன் இணைந்து ஒரு திரைப்படம், வெற்றிமாறனின் ஒரு திரைப்படம் என அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சில பிரச்சனைகளால் இந்தியன் 2 திரைப்படம் பாதியிலேயே இருக்கிறது. அதோடு இவர் இயக்கத்தில் உருவாகி பாதியிலேயே நின்ற தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை மீண்டும் இயக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம். இதனைத் தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை இவரே தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.