68 வயதில் மூன்று பெண்களுக்கு நடுவே சாய்ந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த நடிகர் கமலஹாசன்.! லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இதோ..

kamal hassan 2
kamal hassan 2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கமல் சமீபத்தில் தன்னுடைய 68வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார். இப்படிப்பட்ட நிலையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வேற லெவலில் போட்டோ சூட் நடத்தியுள்ள நிலையில் அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய நான்கு வயதில் சினிமாவிற்கு அறிமுகமான கமலஹாசன் அவர்கள் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவருக்கு 68 வயது ஆவது என்பது யாராலும் நம்ப முடியவில்லை ஏனென்றால் தற்போது வரையிலும் தன்னுடைய உடலையும், மனதையும் மிகவும் இளமையாக வைத்து வருகிறார்

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேவர் மகன் கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்பொழுது அதையும் மிஞ்சும் அளவிற்கு சில போட்டோ சூட்டுகள் நடத்தி இருக்கிறார். அதாவது கமலஹாசன் அவர்கள் 3 அழகிகளுடன் ஜாலியாக சிரித்தபடி இருக்கும் புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

kamal-hassan-5
kamal-hassan-5

அதில் தாடி மீசையென செம ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு இருக்கிறார். மாடல்கள் மீது சாய்ந்த படி இவர் கொடுத்துள்ள போசை பார்த்து ரசிகர்கள் அவர் இன்றும் இளமை இதோ இதோ பாடல் வெளிவந்த அதே காலத்தில் தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இவ்வாறு இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இவருக்கு 68 வயது என்பது நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kamal hassan 4
kamal hassan 4

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது. இந்த திரைப்படத்தில் தொடர்ந்து தற்பொழுது இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal hassan 3
kamal hassan 3