Indian 2: உலக நாயகன் கமலஹாசன் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2 படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். மேலும் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.
கடைசியாக நடிகர் கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கமலின் மார்க்கெட்டை உயர்த்தியது. எனவே இதனை அடுத்து நடிப்பு, தயாரிப்பு என படும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7வது சீசன் துவங்க இருப்பதனால் இதிலேயும் பணியாற்ற இருக்கிறார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆனால் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தால் சூட்டிங் நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா லாக் டவுன் போன்ற காரணங்களால் கிடப்பில் கிடந்தது சமீபத்தில் ஷூட்டிங் தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது மேலும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் கமல் பெண் வேடத்தில் நடித்து இருக்கிறாராம். இதற்கு முன்பு கமல் அவை சண்முகி, தசாவதாரம் போன்ற படங்களில் நடித்தது ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து தற்பொழுது இந்தியன் 2 படத்திலும் கமல் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.
இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், பேபி சிம்ஹா போன்றவர்கள் நடித்துள்ளனர். இவ்வாறு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.