தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நாம் அனைவரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்தத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாற்றி குறை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் தேர்தலில் களம் இறங்கியுள்ளார்கள்.
அந்தவகையில் கமலஹாசனும் மக்கள் நீதி மையம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த கட்சி கடந்த தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் பெற்றிருந்ததால் இந்த முறையும் போட்டி போட தயாராகி உள்ளது. அந்த வகையில் கமல் கோயம்புத்தூர் தெற்கு வேட்பாளராக போட்டி போட உள்ளார்.
மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தவகையில் அடிப்படையான ஒரு விஷயத்தை வைத்துள்ளார். அதாவது நாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு வேறு வழி உள்ளது நான் அரசியலில் செயல்படுவது உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது இளைய மகள் அக்ஷரா ஹாசன் தனது அப்பாவுடன் லைட் பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த எதிர்க்கட்சி தொண்டர்கள் கமல் என்ன வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறாரா? என்ற கேள்வி எழுதி இருந்தார்கள்.
எனவே விரைவில் ஸ்ருதிஹாசனயும் பிரச்சாரத்தில் பார்க்கலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் சுகாஷுனி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் தனது அப்பாவுடன் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து ரசிகர்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்து உள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.
#MNM star campaigners @ikamalhaasan’s niece #SuhasiniManiratnam and his daughter @Iaksharahaasan dance their way to the hearts of people of #CoimbatoreSouth, as the campaign reaches its crescendo. pic.twitter.com/szKfQDWrS2
— Sreedhar Pillai (@sri50) April 4, 2021