நடிகர் கமல்ஹாசனின் அடுத்த பட இயக்குனர் இவர்தான் – அப்டேட் கொடுத்த லோகேஷ்.!

kamal-
kamal-

கமலஹாசன் ஆரம்பத்தில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டு உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வில்லனாக நடிப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து ஹீரோவாக மட்டும் டாப் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இவரது படங்கள் ஒவ்வொன்றும் மிரட்டும் வகையில் இருக்கும் அந்த அளவிற்கு கமலஹாசன் நடிப்பில் தன்னை தத்துரூபமாக பாவித்து சிறப்பாக நடித்து அசத்தி வருகின்ற நிலையில்  இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கமலை வைத்து படம் பண்ண பலரும் போட்டி போட்டு வந்தனர். ஆனால் கமல் இடையில் அரசியல், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி, பல தொழில் நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் என அனைத்திலும் கவனம் செலுத்தி வந்ததால்..

படங்களில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது இருந்தாலும் தொட்ட அனைத்திலும் வெற்றியை கண்டு வந்த கமல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கமலுக்குபிடித்துப் போக விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். லோகேஷ் கனகராஜ் டாப் நடிகர்களை வைத்து மாஸ் கலந்து திரைப்படங்களை கொடுத்து சிறந்த இயக்குனர் பட்டியலில் உள்ளவர்.

அதனால் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த விக்ரம் திரைப்படத்திற்கு உலகளவில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் படம் குறித்து பல சுவாரசிய தகவல்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார்.

அதில் கமலின் அடுத்த பட இயக்குனர் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். கமலுடன் அடுத்து பணியாற்ற உள்ள மகேஷ் நாராயணனிடம் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமல் அடிபோலி எனக் கூறினாராம். மேலும் லோகேஷ் கனகராஜ் மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார் இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.